பொள்ளாச்சி விவகாரம்! தந்தையின் பார்வையில் மகளின் வேதனை! வீடியோ!

0
386

தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை பெண்களை ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பிறகு பெண்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவ்வளவு ஏன் கோவையில் இரண்டு பெண்கள் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு மனு கூட அளித்தனர். உண்மையில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன. உண்மையில் மாற வேண்டியது பெண்கள் யார்..? ஏமாறும் பெண்களா..? இல்லை ஏமாற்றும் ஆண்களா?

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் உயிருக்கு ஆபத்து! பொலிஸ் நடவடிக்கை!
Next articleநடிகர் சத்தியராஜின் மகள் குறித்த வதந்தி!