பொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம்! சிக்கும் பிரபலம்! அவரின் புகைப்படம் வெளியானது!

0

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பொலிஸ் காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பொலிஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமாருக்கு பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 25ந் திகதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் ஆஜராகும்படி சம்மனில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகூடா நட்பு! மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!
Next articleஉங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டாக்கும் வெள்ளி மோதிரம் பற்றி தெரியுமா!