பொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை! அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்!

0

தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வலிக்கில் மிரட்டல்களுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை திருநாவுக்கரசு என்ற இளைஞன் மற்றும் அவனது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அதில் ஒரு பெண் விட்டுவிடுங்க அண்ணா என்று கெஞ்சியும் இரக்கமே இல்லாமல் பெல்ட்டால் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்ணீர் வரவைத்தது.

இதனால் இவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். உச்சகட்ட தண்டனையாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் தங்கள் ஆதங்கமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் சீரழித்த இவர்களின் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது.

அதன் படி தமிழக அரசும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. சிபிஐ பதில் அளிக்காததால் சிபிசிஐடி போலீசார் விசாரணையை நேற்று தொடங்கினர்.

இதற்கிடையில் பொலிசார் தற்போது நடத்தும் விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பல இளம்பெண்களை பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, இதேபோன்று ஆபாச படம், வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்துள்ளனர்.

பல பெண்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொலிசில் புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். சிலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

மேலும், பல மாணவிகள் அதிகார மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த வழக்குகளை காவல் துறையினர் குடும்ப பிரச்னை மற்றும் வியாதி காரணமாக தற்கொலை என முடித்து வைத்துள்ளனர்.

இப்படி எந்தெந்த வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலையும், பொள்ளாச்சி பகுதியில் கடந்த 7 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய பெயர் விவரத்தையும் சிபிசிஐடி போலீசார் சேகரிக்க துவங்கியுள்ளனர்.

இதனால் இந்த சம்பவத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசூடுப்பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்! கதற விட்ட இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் தீயாய் பரவும் காட்சி
Next article100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த இளைஞர்கள்! நேரலையில் இந்த தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய பிரபல நடிகை!