பொலிஸைப் போல் ஊடுருவும் கொள்ளையர்கள்! யாழ் மக்களுக்கு எச்சரிக்கை ! முதலில் செய்யவேண்டியது என்ன?

0
562

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைப் பயன்படுத்தி பொலிஸார் போன்று கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைவதாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்துப் பொதுமக்களையும் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் வழிப்பறி மற்றும் ஆயுத முனைக் கொள்ளைகள் ஆங்காங்கே இடம்பெற்றுவருவதால் பொதுமக்கள் உசாராகவும் அவதானமாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

இதன்படி குறித்த கொள்ளையர்கள் பொலிஸார் அல்லது சீ ஐ டி போன்ற தரப்பினர்கள்போல வீடுகளைச் சோதனையிடபோவதாகத் தெரிவித்து உள்ளே நிழைந்து கொள்ளையடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

மேலும் வீதிகளில் இடைமறித்து கையடக்கத் தொலைபேசி மற்றும் நகைகள் என்பன வழிப்பறி செய்யக்கூடிய நிலைமைகளும் காணப்படுகின்றன என தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் என்ன செய்யலாம்?

எப்பொழுதும் மக்களைச் சோதனையிடும் அல்லது மக்கள் பிரச்சினையில் தலையிடும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தமக்குரிய சீருடைகளுடனேயே பிரவேசிக்கவேண்டும். இந்த நிலையில் சிவில் உடையுடன் வந்து விடுகளைச் சோதனையிடப்போவதாக கூறினால் (சீ.ஐ.டி தரப்பினர் தவிர) அதற்கு மக்கள் அனுமதியளிக்கக்கூடாது.

ஆனாலும் சில வேளைகளில் சீருடைகளுடன் சோதனையிட வந்தாலும் அவர்கள்குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். பாதுகாப்புத் தரப்பினரின் சோதனையில் பொதுமக்கள் இடையூறு விளைவிக்கமுடியாது எனினும் அவர்கள் சோதனையிடுவதை வைத்தகண் வாங்காமல் அவதானிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

மேலும் வீதிகளில் சிவில் உடையில் நின்று யாராவது வழிமறித்தால் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு இல்லை. ஆனாலும் வழிமறிப்பவர் தம்மை சீ.ஐ.டி துறையைச் சேர்ந்தவர் என கூறுவாராயின் அவரிடம் அதிகாரமிக்க அடையாள அட்டையினைக் கேட்டுப் பெற்று உறுதிப்படுத்தவெண்டியது அவசியமாகும்.

இதன் பின்னர் அவர்கள் பாதுகாப்புத் துறையினைச் சார்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தியன்பே தமது உடைமையில் அவர்களை கை வைக்க அனுமதிக்கவேண்டும்.

இதேவேளை அசாதாரண நிலைமை காணப்படும் அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்திலுள்ள சில வீடுகளில் கொள்ளையர்கள் தமது கைவரிசையினைக் காட்டியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: