பொலிஸாரின் தகவல்! மைத்திரி மற்றும் மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய சூழ்ச்சி!

0
237

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையிடமிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாத்துவ பொலிஸ் நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிற்கு அமைய ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி சிலருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அறிந்த இந்திய பிரஜை, நாமல் குமாரவின் இல்லத்திற்கு சென்று அவரிடம் இது குறித்து வினவியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தவிர்த்து, கொலை சூழ்ச்சி தொடர்பில் இந்தி பிரஜையிடமிருந்து எவ்வித தகவலும் வெளிப்படவில்லை என கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை வெளிப்படுத்தியுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் ஊடகப் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: