Home thatstamil one india tamil oneindia tamil பொலிசாரிடம் சொன்ன திடுக் தகவல்! ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்!

பொலிசாரிடம் சொன்ன திடுக் தகவல்! ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்!

0
897

தமிழகத்தில் ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வரும் அந்த ஆசிரியையின் கணவர் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியாக வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதியின் பெயர் மற்றும் மாணவர்களின் பெயர்களை பொலிசார் கூறவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டு குளியலறையில் ஆசிரியை குளித்து கொண்டிருந்த போது, அங்கிருக்கும் வெண்டிலேசன் ஜன்னலில் கை ஒன்று தெரிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை சத்தமிடாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இருப்பினும் பக்கத்து வீட்டில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் செயலாகத்தான் இது இருக்கும் என்று எண்ணி அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்தாக கூறப்படுகிறது.

அதன் பின் ஆசிரியையின் அங்கங்களை வர்ணித்தும், உடலில் எந்தெந்த இடத்தில் மச்சம் உள்ளது என்று குறிப்பிட்டும், இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு விடுவோம் என்று சீட்டு ஒன்றில் எழுதி ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர்.

இதனால் இது குறித்து உடனடியாக ஆசிரியை தன்னுடைய கணவனிடம் கூற, இருவரும் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது பொலிசார் அந்த மிரட்டல் கடிதத்தையும் சந்தேகத்துக்கு இடமான பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்து போது இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.

அவனை பிடித்து நடத்திய விசாரணையில், தன்னுடன் படிக்கின்ற மேலும் 2 மாணவர்களும் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை திருட்டு தனமாக பார்த்து ரசித்ததாகவும், ஒரு கட்டத்தில் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் கைது செய்த பொலிசார் மாணவர்களிடம் இருந்து செல்போன்களையும், ஆசிரியையின் வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Previous articleதிடுக்கிடும் பின்னணி! காதலியை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து கொன்ற இளைஞர்! 4 மாதம் கழித்து சிக்கினார்!
Next articleஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் யார் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்?