இன்று தை பொங்கல். 15.01.2020 பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன? இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி அமையப்போகிறது!இன்றைய பஞ்சாங்கம்!

0

இன்றைய பஞ்சாங்கம்
15-01-2020, தை 01, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 12.10 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 04.06 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். தை பொங்கல். பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை, காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 02.00 மணி வரை. கரி நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசி பலன் – 15.01.2020

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 11.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.28 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய தெய்வதிருமகள் பேபி சாரா வெளியிட்ட புகைப்படம் யம்மாடியோவ் வளந்துட்டாளே!
Next articleதிடீர் ராஜயோகம் கூரையை பிச்சிகிட்டு தேடி வரும்? தை மாதம் முழுவதும் சனி பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் பேரதிர்ஷ்டம்!