பைக்கை விடாமல் துரத்திய புலி! நூலிழையில் உயிர் தப்பிய நபர்! பதற வைக்கும் காட்சி!

0
418

கேரள மாநிலம் வயநாட்டில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை புலி ஒன்று மின்னல் வேகத்தில் துரத்தி செல்லும் காட்சிகள் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு அருகே முத்தங்க வனவிலங்கு சரணாலயம் உள்ளது.இங்கு புலி, யானை உள்ளிட்ட ஏரளாமான வனவிலங்குகள் உள்ளன. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவர்களை நோக்கி மின்னல் வேகத்தில் புலி பாய்ந்து வந்தது.

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி புலியிடம் இருந்து தப்பினர். இந்நிலையில் சில வினாடிகள் மட்டுமே பின்னால் துரத்தி வந்த புலி வேகமாக சாலையை கடந்து மறைவான பகுதிக்கு சென்றுவிட்டது.

இந்த காட்சியை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஏதேச்சையாக படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நொடிகள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் இருவரும் புலிக்கு இரையாகிருப்பார்கள் என்பது வீடியோவில் தெரிந்தது. நல்லவேளையாக புலி தொடந்து பின் தொடரவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று பிக்பாஸில் யார் யாரை நாமினேஷன் செய்றாங்க! வெளியேறுவது இவர் தானா!
Next articleசீக்கிரம் கோடீஸ்வரியாகி சொகுசா வாழனும்! கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்ணின் பகீர் செயல்!