பேஸ்புக்கில் வெளியான தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன தமிழக மாணவி! அடுத்து நடந்த விபரீதம் சம்பவம்!

0
541

தமிழகத்தில் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தனது புகைப்படம் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் அவரின் மாமன் மகனும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராதிகா (22). இவர் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இதை அவமானமாக கருதிய அவர் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வெளியே சென்றிருந்த ராதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் விக்னேஷ் (21) என்பவர், ராதிகா தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விக்னேஷ் அங்குள்ள தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பொலிசார் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த இரக்கமற்ற தந்தை! காரணம் என்ன!
Next article44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி!