எவ்வளவு கொடிய‌ விஷக்கடியாக இருந்தாலும் விஷத்தை முறித்து உயிர் காக்கும் பேய்ச்சுரை என்னும் காட்டுசுரை !

0
2109

கசப்பாக இருக்கும் பேய்ச்சுரை அல்லது காட்டுசுரையின் இலை கொடி, காய் விதை என அனைத்துமே மருத்துவக் குணமுடையதாக காணப்படுவதனால் எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைத்து விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுப்பதுடன் இதன் இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிடுதல் வேண்டும். மேலும் திடீரென ஏற்படும் பேதி வாந்தி முதலியவற்றினால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு உள்ளானவரின் உயிர் கூட மீண்டுவரும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடக் கூடும். அத்தகைய நிலைமைகளில் கூட அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் அக்கொடிய விஷத்தை கூட சுலபமாக முறித்துவிடலாம்.

இவ்வாறாக கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்ட நிலையில் பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து அதனுடன் சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிடும் போது ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும். இவ்வாறாக நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுக்கும் போது விஷமுறிவு ஏற்பட்டு குணம் தெரியும். இவ்வாறாக விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்வது மிக முக்கியமாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: