பெற்ற மகளுடன் தகாத உறவு கொண்டு பிள்ளை பெற்றெடுத்த தந்தை!

0
884

அமெரிக்காவில் பெற்ற மகளுடன் தகாத உறவு கொண்டு பிள்ளை பெற்றெடுத்த தந்தை திருமணத்திற்கும் ஏற்பாடு செய்த நிலையில் உண்மை வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் North Carolina பகுதியைச் சேர்ந்தவர் Steven Pladl(42), இவருக்கு Alyssa என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு மூத்த மகளான Katie-யை தத்துக்கொடுத்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பேஸ்புக் மூலம் 2016ம் ஆண்டு இணைந்துள்ளார்.

குடும்பமாக அனைவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் Alyssa- கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து Alyssa-க்கு அழைப்பு வந்த நிலையில், 11 வயது மகள் நார்மலாக இல்லை என கூறியதுடன் அவளது டைரியை ஒப்படைத்துள்ளார்.

அதில், தந்தையும், மூத்த சகோதரியும் தவறான உறவு வைத்துள்ளதாகவும், இதன்விளைவாக Katie கர்ப்பமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் Katieயை வளர்ப்பு தாய் என அழைக்க தந்தை வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன, Alyssa இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதையும் தெரிந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து Alyssa அளித்த புகாரின் பேரில் இருவரையும் பொலிசார் கைது செய்தனர், அவர்களது நான்கு மாத குழந்தையையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் Wake County Detention Center-ல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1 மில்லியன் டொலர் பிணையத்தொகையில் Steven விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: