பெற்ற தாயை அடித்து கொன்றது ஏன்? மகன் பரபரப்பு வாக்குமூலம்!

0
321

இந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஷகுந்தலா தேவி. இவருக்கு அஜித், ஜிதேந்திரா, புஷ்பேந்திரா என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சொத்து பிரச்சனையின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஷகுந்தலாவை அஜித் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும் தனது இரண்டு சகோதர்களையும் இரும்பு கம்பியால் தாக்கியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்த அஜித்தை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் குடும்பத்தின் மூத்த சகோதரன் என்பதால் பணம் சம்மந்தமான எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் தனது சொத்து பங்கை பிரித்து தர அவன் கேட்டான்.

இது எனக்கு பிடிக்காத நிலையில் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

என் அம்மா சகுந்தலாவும் சொத்தை பிரிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

இதன் காரணமாக நடந்த வாக்குவாதத்தில் அம்மாவை அடித்து கொலை செய்து, என் சகோதரர்களை தாக்கினேன் என கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: