பெண் செய்த விளையாட்டால் உயிர் போன பரிதாபம்!

0
337

ஆஸ்திரேலியாவில் மணப்பெண் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் Allhartsberg பகுதியில் வசித்து வந்த Jasmin Schwarnthorer என்ற 26 வயது இளம்பெண்ணுக்கு திருமண சிறிது நாளில் நடக்கவிருந்த நிலையில் மனப்பெண் விபத்தில் இறந்துள்ளார்.

Jasmin Schwarnthorer தன் சக தோழிகளுடன் டிராக்டரில் பின்னால் இருக்கும் டயரில் நின்று கொண்டு வந்துள்ளார். அப்போது டிராக்டர் கவிழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தோழிகள் மற்றும் மணப்பெண் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியின் மூலம் அவரகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் 5 பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 7 பெண்களுக்கு லேசான அடிப்பட்டதாகவும் அதில் Jasminக்கு தலையில் பலமாக மோதியுள்ளது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்தார்.

அடுத்த மாதம் Bernhard என்பவருடன் திருமணமாக உள்ள நிலையில் அவர் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: