பெண்னை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்ற கிராம மக்கள்! கணவன் முன்னிலையில் காதலனுடன் ஊர் சுற்றிய ஜோடி!

0
570

ராஜஸ்தான் மாநிலம் காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதய்பூர் அருகே தனோகி பகால் கிராமத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தரூ காம்தி என்றபருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு ராம்லால் காம்தி என்ற இளைஞருடன் காதல் இருந்துள்ளது.

இதுகுறித்து தரு காம்தி பழங்குடியினர் பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இருவரது திருமணம் முறிந்ததாக அறிவிக்கப்பட்டு பிரித்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்த இளம் பெண் தனது காதலர் ராம்லால் காம்தியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இருவரும் இதன் பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ஒருநாள் இருவரும் சந்தித்து பேசியதை அவரது முன்னாள் கணவர் தரு காம்தி பார்த்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் கடும் கோபமடைந்தார். இருவருக்கும் பாடம் புகட்ட நினைத்த தரு காம்தி, பஞ்சாயத்தில் சென்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, கணவரும், அந்த கிராமத்தினரும் சேர்ந்து இருவரையும் அடித்து உதைத்தனர்.

அத்துடன் இருவரையும் நிர்வணமாக்கி ஊர்வலமாக கைகளை கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த காட்சியை சிலர் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர். வீடியோவும் எடுத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்த அந்த பகுதி காவல்துறை அதிகாரி சவுகான் கூறுகையில் ‘‘பழங்குடியினர் கிராமம் ஒன்றில் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கேள்வி பட்டோம். இதையடுத்து விசாரித்து 5 பேரை கைது செய்துள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: