பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மகன்: பொதுவெளியில் தந்தைக்கு தண்டனை!

0
354

திருமணமான பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவிட்டு மகன் தப்பியோடிய நிலையில் ஊர் மக்கள் தவறு செய்தவரின் தந்தையை கட்டி வைத்து அடித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் சயிம்பலிம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ ராவ் (65). இவர் மகன் நாகேந்திரா (26).

நாகேந்திரா, கிராமத்தில் உள்ள திருமணமான 21 வயது பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து வெளியில் தெரிந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நாகேந்திராவை தேடியுள்ளார்.

ஆனால் அவர் கிடைக்காமல் போகவே சஞ்சீவ ராவை பிடித்து மகன் குறித்து விசாரித்துள்ளனர்.

மகன் எங்குள்ளான் என தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் மாமா ராஜூ (45) ஊர் மக்களுடன் சஞ்சீவ ராவை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் விடுவிக்கப்பட்ட சஞ்சீவ ராவ் அவமானம் தாங்காமல் வீட்டுக்கு சென்று விஷம் குடித்துள்ளார்.

உடனடியாக உறவினர்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து ராஜூ மற்றும் நாகேந்திரா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: