பெண்ணுறுப்பில் நாற்றம், அரிப்பு போன்றன‌ ஏற்படுவதால் மிகவும் சங்கடமாக உள்ளதா? எப்படி சரி செய்வது?

0
6649

பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் அதாவது அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது வலி போன்றன ஏற்படுவதுண்டு. இது 75 சதவீத பெண்களுக்கு ஒரு முறையாவது ஏற்படுவது உண்டு.

இது அதிகம் பெருகி வளர்வதற்கான சில காரணங்கiளாக,

 • அடிக்கடி ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் போது, அது லக்டோபசில்ஸ் எனும் நல்ல பாக்டீரியாவினை குறைத்து விடுவதனால் இது ஏற்படுகின்றது.
 • கருத்தரித்தல்
 • நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவ மிகையாதல்
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
 • போதிய சத்துகள் இல்லாத உணவு மற்றும் மிகக் குறைந்த உணவினை உட்கொள்தல்
 • மிகையான சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளை உட்கொள்தல்
 • மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய ஹார்மோன் மாறுபாடுகள்
 • மனஅழுத்தம்

சில பெண்களுக்கு இவ்வாறு அடிக்கடி அதாவது வருடத்திற்கு 4 முறைக்கு மேல் யீஸ்ட் பூஞ்சை தாக்குதலுக்கு ஏற்படுவதற்கான காரணங்களாக,

 • சீரற்ற ஹார்மோன்
 • கர்ப்ப காலம்
 • அதிகளவான நிறையேற்றம்
 • இறுக்கமான ஆடை அணிதல்

ஒருவருக்கு யீஸ்ட் பூஞ்சை பாதிபு ஏற்பட்டுள்ளது என்பதனை அவரின் அரிப்பு மற்றும் வெள்ளை நிற திட்டு வெளியேற்றம் மூலம் தெரிந்து கொள்ள முடிவதுடன், இதனை நிவர்த்தி செய்வதற்கு மருத்துவர் உள்ளெடுக்கும் மருந்து, பூசக் கூடிய மருந்து அதாவது க்ரீம் போன்றனவற்றைப் பரிந்துரைப்பார்.

பொதுவாக பெண்களில் 5 சதவீதமானோருக்கு இப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றதுடன், இவர்களுக்கு மருத்துவர் பொதுவாக 6 மாத கால தொடர் சிகிச்சை அளிப்பதுண்டு. இத்தகையோர் உணவில் கொழுப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்வதுடன், பருத்தி உள்ளாடைகளை அணிவது சிறப்பான பலனைத் தரும்.

திருமணமான பெண்களிடையே பிறப்புறுப்பில் பாக்டீரியா கிருமி சற்று கூடுதலாகக் காணப்படுகின்ற போதிலும் சில நேரங்களில் இவை அறிகுறி இல்லாமல் இருக்க முடியும். அதாவது இவை அநேகமாக நீர் போன்ற கசிவு, துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு போன்றவாறாகவே காணப்படுவதுடன், ஆன்டிபயாடிக் சிகிச்சையில் இது எளிதாக குணமாகிவிடும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் உடனடி சிகிச்சை பெறுவது அவசியமாகின்றது.

தினமும் காலையில் கொழுப்பில்லாத தயிர் மற்றும் ஊற வைத்த வெந்தயத்தை நீருடன் எடுத்துக் கொள்தல் என்பன சிறந்த நிவாரணமாக அமையும்.

இது போன்று சிறுநீர் பாதை நோய் தொற்று அடிக்கடி ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்களாக,

 • வைத்தியசாலையில் இருப்பவர்கள்
 • நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள்
 • சிறுநீரகத்தில் கல் உடையவாகள்
 • சிறுநீர் வெளியேற குழாய் பொருத்தப்பட்டவர்கள்
 • மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்;.
 • பிறப்பின் போதே சிலவகையான குறைபாடு உடையவர்கள்

மேலே குறிப்பிட்டோருக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் அதற்குப் பொருத்தமான சிகிச்சையினை வழங்குவதன் மூலம் இப்பிரச்சினையிலிருந்து நிரந்தரமாக விடுபட முடியும்.

By: Tamilpiththan.com

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: