ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அவனுடைய பழக்க வழக்கங்கள், ஆளுமை பண்பு, உண்மையான பண்பு, பிடிக்கும், பிடிக்காதது, எதிர்காலம், காதல், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை என்று ஒரு பட்டியலே வைத்து இருப்பார்கள். நம்ம துல்லியமான ஜோதிடமும் இதைக் கொண்டு தான் பெண்களை ஈர்க்கும் 4 ராசிக்காரர்கள் பற்றி இங்கே கூறப் போகிறது.
ஜோதிடமும் பொருத்தமும்
பெண்களுக்கு சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஜோதிடம் பெரிதும் உதவுகிறது. பெண்கள் தங்கள் குணநலனுக்கு ஒத்துப் போகின்ற ஆண்களையே தேடிகிறார்கள். அப்பொழுது தான் உறவும் இனிக்கும் என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது.
பொருத்தமான பட்டியல்
ஜோதிட பட்டியல் படி கீழ்க்கண்ட ராசிக்காரர்கள் எளிதாக பெண்களை கவரக் கூடியவர்களாக இருப்பார்களாம். இவர்களை சுற்றி எப்பொழுதும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்குமாம். ” கங்கை கரைத் தோட்டம் கன்னி மலர் கூட்டம் கண்ணன் நடுவினிலே” இந்த பாட்டு இந்த ராசிக்காரர்களுக்கு நல்லாவே பொருந்தும் எனலாம். சரி வாங்க உங்க ராசியும் இந்த பட்டியல்ல இருக்கான்னு பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசி ஆண்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் பெண்களின் அன்பை பெற இவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய தேவையில்லை. இவர்கள் டக்கென்று பெண்களை கவர்ந்து விடும் வல்லவர்கள்.
இயற்கையிலேயே இவர்கள் மென்மையான பேர் வழியாகவும், ரொமாண்டிக் ஆன ஆண்களாகவும் இருப்பார்கள். அதனால் தான் என்னவோ பெண்கள் இவர்களுடன் நட்பு பாராட்ட மிகுந்த அவசரப்படுகிறார்கள். இவர்களுக்கு பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது நன்றாக தெரியுமாம்.
இவர்கள் ரெம்ப உணர்வுப் பூர்வமான ஆண்களாக இருப்பார்கள். அதனால் தான் எளிதில் பெண்ணின் இதயத்தை புரிந்து கொண்டு விடுகிறார்கள். எனவே மிதுன ராசிக்காரர்கள் நிறைய பெண்களின் இதயத்தை திருடியவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சிம்மம்
சிம்ம ராசி ஆண்கள் எப்பொழுதும் ஒரு மனப்பூர்வமான உறவை ஏற்படுத்தி விடும் கெட்டிக்காரர்கள். இயற்கையிலேயே இவர்களும் ரொமாண்டிக் ஆன பேர்வழி தான். பெண்கள் இவர்களுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று கூட விரும்புவார்களாம். காரணம் இவர்களின் கலகலப்பு தன்மை தான்.
நல்ல நட்பு, இயல்பான தன்மை இவர்களின் குணநலன்கள். பெண்களின் பாராட்டுக்கு இந்த ராசி ஆண்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள். இருப்பினும் பெண்களின் பாராட்டு வந்து கொண்டே தான் இருக்குமாம். முதல் பார்வையிலேயே பெண்களை ஈர்க்கும் காதல் ராசி இவர்கள் தானாம். இவர்களின் தாராள மனப்பான்மையும் உணர்வுப் பூர்வமான செயல்களும் பெண்களை எளிதில் ஈர்த்து விடும். பெண்களை இதயத்தை எளிதில் வென்றெடுக்கும் வல்லமை படைத்தவர்கள்.
துலாம்
இவர்களுடைய வித்தியாசமான பார்வை ஒன்றே போதும் பெண்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். அதிலும் அழகான பெண்கள் எப்பொழுதும் இவர்களைச் சுற்றி தான் இருப்பார்களாம். அதே நேரத்தில் காதல்னு வந்துட்டா இந்த ராசி ஆண்கள் ஆழமான காதலை கொண்டு இருப்பார்களாம். காதல், வேலை இரண்டையும் சரிவர கவனிப்பதில் இவர்கள் கில்லாடிகள். இந்த ராசி ஆண்கள் எதையும் ஆழமாக யோசித்த பின்னரே அடியெடுத்து வைப்பார்கள். இயற்கையிலேயே இவர்கள் கூச்ச சுபாவம் கொண்டவர்கள்.
மகரம்
மகர ராசி ஆண்கள் தங்களுடைய தோற்றத்திலயே பெண்களை கவரக் கூடியவர்கள். அழகான இந்த ராசி ஆண்கள் எளிதாக பெண்களை பாதித்து விடுவார்கள். இவர்களுடைய ஸ்டைல், பேச்சு எல்லாமே பெண்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். தங்களை பொருத்த வரை இவர்கள் சந்தோஷமான ஆண்களாக இருப்பார்கள். சரியான கலகலப்பான பேர்வழி இவர்கள். ரொம்ப ஸ்மார்ட் ஆகவும் அட்ராக்டிவ் ஆளாகவும் இருப்பார்கள். நிறைய பெண் நண்பர்கள் இவர்களுக்கு இருப்பார்களாம்.