கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்!

0
1046

தற்போது தடுப்பு மருந்து மூலம் கருப்பைவாய்ப் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்

குடும்பத்தில் அல்லது வாழ்க்கையில் உறவுகளைப் பேணிக்காப்பதில் பெண்மையின் பங்களிப்பு மகத்தானதாகும். கருப்பைவாய்ப் புற்றுநோய் தொடர்பான விசயத்தில் இந்த பாதுகாப்பு உணர்வு மேலும் தீவிரமாகிறது. இந்திய பெண்களின் புற்றுநோய் சம்பந்தமான இறப்புகளில் முதன்மையான காரணமாக உள்ளது இந்த கருப்பைவாய்ப் புற்றுநோய் ஆகும். (இது மார்பக புற்றுநோயை விட அதிகம்).

கருப்பைவாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?

கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை கழுத்தில் (செர்விக்ஸ்) ஏற்படும் புற்றுநோய் ஆகும். கருப்பை கழுத்து (செர்விக்ஸ்) கர்ப்பப்பையின் முகவாயில் அமைந்துள்ளது. மேலும் அது கர்ப்பப்பையை கிருமிகளின் தாக்குதலில் இருந்து காக்கிறது.

கருப்பைவாய்ப் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?
இது பரம்பரையாக வரும் புற்றுநோய் அல்ல. எச்.பி.வி (Human Papillomavirus) என்ற நுண்கிருமி கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) தொற்றுவதால் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக காணப்படும் இந்த வைரஸ் உடலுறவு கொள்வதால் பரவுகிறது. தடுப்பு மருந்து மூலம் இந்த வைரஸின் தாக்கத்தை தடுப்பது இப்போழுது சாத்தியமாகும்.

யாருக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

எச்.பி.வி எனப்படும் இந்த வைரஸ் இளம் பெண்களைத் தான் அதிக அளவில் தாக்குகிறது. இது பிற்காலத்தில் கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்பட பெரும் சக்தியாக விளங்குகிறது. ஆனால் வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களுக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. அதனாலேயே பெண்கள் கூடுமான வரை பாதுகாப்பாக இருப்பது சிறந்ததாகும்.

கருப்பை வாய்ப் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?

கருப்பை வாய்ப் புற்றுநோய் உச்சக்கட்டம் அடையும் வரை சாதாரணமாக எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. பாப் ஸ்மியர் சோதனை மூலமாக மட்டுமே கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறியமுடியும். பாப் ஸ்மியர் சோதனையால் எச்.பி.வி என்ற வைரஸ் தாக்கியுள்ளதைத் தான் கண்டுபிடிக்க முடியுமே தவிர நோய் பரவாமல் தடுக்க முடியாது.

தற்போது கருப்பை வாய்ப் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்பது ஓர் நற்செய்தியாகும்

தற்போது தடுப்பு மருந்து மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
இந்த தடுப்பு மருந்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இந்நோய் எதிர்ப்பு சக்தியானது எச்.பி.வி கிருமி கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) தாக்கும்போது அதனை எதிர்த்து உடலில் பரவாமல் காக்கிறது.
கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) எச்.பி.வி கிருமி தாக்காதவாறு இத்தடுப்பூசி செயல்படுவதால், இது கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரராக பாதுகாப்பளிக்கிறது.

இந்த தடுப்பு மருந்தை யார்யார் எடுத்துக்கொள்ளலாம்?
கூடுமான வரை இந்த தடுப்பு மருந்தை இளம் பெண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக பெற முடியும்.

இருப்பினும் அனைத்து பெண்களையும் இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதால், இந்த தடுப்பு மருந்து தங்களுக்கு உகந்ததா என்று மருத்துவரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவும்

இந்த தடுப்பு மருந்து எவ்வாறு அளிக்கப்படுகிறது? இது பாதுகாப்பனதா?
இந்த தடுப்பு மருந்தை 6 மாதங்களில் குறிப்பிட்ட அளவில் 3 தடவையாக மருந்தாகவோ அல்லது ஊசிகளாகவோ கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தானது உடலுக்கு பாதுகாப்பானதாகவும், ஒத்துக்கொள்வதாகவும் உள்ளது. மற்ற தடுப்பு மருந்துகளைப்போல் இதுவும் லேசான காய்ச்சல் அல்லது வீக்கம் போன்ற மிதமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: