உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வருகிறார்கள். நமது இந்திய நாடு மூலிகைகளின் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் அதிமதுரம்.
அதிமதுரம் ஆரோக்கியத்தின் புதையல் என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் அழகை மேம்படுத்தவும் இது உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதிமதுரம் (கிளைசிரிசா கிளாப்ரா என்று அழைக்கப்படும் ஒரு தாவரத்தின் வேர்) பல நோய்களுக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது.
அதிமதுரம் பெரும்பாலும் இனிப்பு மற்றும் இனிப்பு பானங்களில் இனிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நம் முன்னோர்கள் அதன் வேரை பல நூற்றாண்டுகளாக மருத்துவ நன்மைகளுக்காகப் பயன்படுத்தினர் என சில ஆய்வுகள் நமக்கு கூறுகிறது.
அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள்.
அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
வயிற்றுப் புண் இருப்பதாக தெரிந்தால், அதிமதுரத்தை குளிர்ந்த நீரில் கலந்து குடிக்க வேண்டும் இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டும் அல்லாமல், வயிற்றின் காயத்தை குணப்படுத்தவும் உதவும். அதேவேளையில் காசநோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.
சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்.
நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.