பெட்ரோலை ஊற்றி இளம் பெண் மீது நெருப்பு வைத்த பிரித்தானியர் அதிர்ச்சி காரணம்!

0
748

வியட்நாம் நாட்டில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண் மீது நெருப்பு வைத்து கொல்ல முயன்ற பிரித்தானியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வியட்நாமில் தொழில் செய்துவரும் 52 வயது Gary Iredale என்பவரையே கொலை முயற்சி தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வியட்நாமை சேர்ந்த 23 வயதான Nguyen Hang என்பவரை காதலித்து வந்த கேரி, காதல் முறிவால் ஆத்திரமடைந்து இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளதால் Nguyen Hang உஅடலில் 70 விழுக்காடு தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே குறித்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தாய்லாந்துக்கு தப்பிய Gary Iredale-ஐ அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.

முகம் மற்றும் உடலின் பெரும்பகுதி குறித்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு குழந்தைக்கு தாயாரான Nguyen Hang கடந்த ஓராண்டாக குறித்த பிரித்தானியருடன் நட்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் பொருத்தப்படவில்லை என்ற காரணத்தால் அவர் பிரித்தானியருடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

இதில் ஆத்துரம் அடைந்த பிரித்தானியர், குறித்த இளம் பெண்ணிற்கு சொந்தமான கடை வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துவிட்டு தப்பியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: