புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி

0

புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி

அண்மைக்காலமாக பிரபல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் வழங்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வத்தளையில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட சாப்பாட்டில் புழு ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ள பெருந்தொகை பணம் செலுத்த வேண்டும்.

எனினும் அங்கு சுத்தம் மற்றும் சுகாதார தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வத்தளை பொது மக்கள் சுகாதார அதிகாரிகளினால் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ளும் போது, அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், புழுவுடன் கூடிய உணவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கொழுப்பிலுள்ள பிரபல உணவகத்திலும் இவ்வாறு மனித பாவனைக்கு பொருத்தமற்று உணவு வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளும் இவ்வாறு புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பெருமளவானோர் கடைகளில் உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பெரும் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 23-09-2017
Next articleஇன்றைய ராசிபலன் 24-09-2017