இதை படித்து ஷாக் ஆகிடாதீங்க! புற்றுநோய்க்கு இவை தான் காரணம்!

0
3192

உலகில் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன, புற்றுநோய் என்பது திடீரென்று வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது.

புற்றுநோய் நமது மரபணு பரம்பரை ரீதியாக தோற்றுவதில்லை, அதற்கு காரணம் நம் செயல்களும் பழக்கவழக்கங்களும்.

அன்றாடம் நாம் உபயோகிக்கும் சில பொருட்களாலும் கூட புற்றுநோய் வரக்காரணமாக அமைகின்றது.

புற்றுநோயை அடியோடு அழிப்பதற்கு நம் அன்றாடம் செய்யும் செயல்களையே மாற்றினால் போதும், தற்போது புற்றுநோய் எவ்வாறு எவ்வழியில் நம்மை சேர்கின்றது என்று பார்ப்போம்.

மதுவை அதிகமாக அருந்தும் போது, உணவுக்குழாய், பெருங்குடல், மலக்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

டீசல் வண்டிகளில் இருந்து வெளிவரும் புகையை அதிகமாக சுவாசித்தால், அந்த மாசுக் காற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.அன்றாடம் பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் அடங்கியுள்ளது.

செயற்கை களைக்கொல்லிகளில் உள்ள செயற்கூறு பொருட்கள் மற்றும் சர்பாக்டான்ட்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றது.

மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையில் கார்சினோஜென்களான டோலுன், அல்டிஹைடு, கீடோன்கள் மற்றும் இதர பொருட்கள் புற்றுநோய் செல்களை பெருகச் செய்து, புற்றுநோயை உண்டாக்கும்.

கிரானைட் கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டுவதால் இந்த கற்களால் ரேடான்களின் வெளியீடு அதிகரித்து, புற்றுநோயின் அபாயம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

சோடா பானங்களை அதிகமாக பருகினால் அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பித்தப்பை புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டிகளை உண்டாக்கும்.

சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் சன் ஸ்க்ரீன் க்ரீம்களில் உள்ள ஜிங்க் ஆக்ஸைடு, ப்ரீ ராடிக்கல்களை உற்பத்தி செய்து, டிஎன்ஏவை பாதிப்படையச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

ஏர் பிரஷ்னர்களில் உள்ள குறிப்பிட்ட சில கெமிக்கல்களை நாம் சுவாசிக்கும் போது, மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதித்து, புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.

டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். இதற்கு அந்த மெட்டல் டின்களினுள் உள்ள பிளாஸ்டிக் கோட்டின் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். குறிப்பாக இந்த உணவுகளால் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் தான் அதிகம் உள்ளது.

சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் பைகள் பெர்ப்ளூரோஆக்டோனாயிக் அமிலம் உற்பத்தி செய்து, புரோஸ்டேட் மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும்.

பொதுவாக அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சூடேற்றி உட்கொள்ளும் போது, அவை உடலினுள் செல்லும் போது கார்சினோஜென்களாக மாறி, டிஎன்ஏவை பாதித்து, புற்றுநோய் அபாயத்தை உண்டு பண்ணும்.

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

ப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, அது எலும்பு புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.

டீயை மிகவும் சூடாக சூடாக குடித்தால், உணவுக்குழாயின் சுவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின் அப்பகுதியில் புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: