புற்றுநோய் வராமல் தடுக்க இந்த ஒரு மூலிகை போதும்?

0
1464

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளசியை தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் கிடைக்கக் கூடிய பலன்கள் பற்றி நோக்குவோம்.

புற்றுநோய்

துளசியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் என்பன மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதுடன் புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதனையும் தடுக்கின்றது.

சர்க்கரை நோய்

துளசியில் உள்ள இயுஜினால், கேரியோஃபைல்ன் மற்றும் மெதைல் கணையத்தை துரிதமாக செயல்பட உதவுவதுடன், இக்கணையத்தில் உள்ள இன்ஸ{லினை உற்பத்தி செய்தல் மற்றும் அதனை வெளியிடுகின்ற பீட்டா செல்கள் இன்ஸ{லினை அதிகரிதது சர்க்கரையை நோயை ஏற்படுத்துவதனை தடுக்கின்றது.

இதயம்

இயுஜினால் இதயத்தை பாதுகாக்கின்றதுடன் எம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைப்பதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறமுடியும்.

மன அழுத்தம்

துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் காணப்படுவதனால் ஸ்ட்ரஸ், மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோன் அதிகரிகரிப்பதனைத் தடுத்து ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. இதற்கு தினமும் பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிட்டு வருதல் அவசியம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெற்ற மகளுடன் கேவலமாக நடந்து கொண்ட தந்தை… கதறி அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்!
Next articleசக்கரை நோயை நெருங்க விடாமல் தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்!