புற்றுநோயை தடுக்கும் உணவுகள்!

0
757

சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது நுண்கிருமிகளை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

துளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவு வில்வ இலை, ஒருபிடி துளசி, சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி வாரம் ஒருமுறை இந்த தேனீரை குடித்துவர புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

குழந்தைகள் 20 மில்லி அளவிலும், பெரியவர்கள் 50 முதல் 100 மில்லி அளவுக்கும் இந்த தேனீர் குடிக்கலாம்.
அருகம்புல் ஒரு நல்ல மருந்தாகிறது. அதிக புரதச்சத்து உடையது. நோய் நீக்கியாக விளங்கும் அருகம்புல் மூப்பை தடுக்கிறது. துளசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. உச்சி முதல் பாதம் வரை வரும் நோய்களுக்கு மருந்தாகிறது. வில்வம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

நெல்லிக்காயை பயன்படுத்தி புற்றுநோயை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பெரிய நெல்லிக்காயின் சதை பகுதியை நீர்விடாமல் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் ஒருமுறை குடித்துவர உள் உறுப்புகள் பலப்படும். புற்றுநோய் வராமல் தடுக்கும் நெல்லிக்காய் ஆயுள் வளர்க்கும் கனியாக விளங்குகிறது. முதுமையை தடுக்க கூடிய மருத்துவ குணங்களை கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்புசக்தி மிக்கது. நெல்லி, மஞ்சள் ஆகியவை செல்களுக்கு சத்துக்களை அளிக்கிறது.

பப்பாளியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். பப்பாளி விழுது ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி வாரம் இருமுறை குடித்துவர கல்லீரல் மற்றும் குடலில் புற்று வராமல் தடுக்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட பப்பாளி ஒரு அற்புதமான உணவாகிறது. சர்க்கரை நோய், கேன்சருக்கு மருந்தாகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கேரட் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்புசக்தி உடைய இது பல்வேறு சத்துக்களை கொண்டது. கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இதேபோல், பாகற்காய் புற்றுநோயை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: