நமது சமூகத்தில் விசித்திரமான நம்பிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. விஞ்ஞானத்திலும் அப்படித்தான், விசித்திரமான ஆராய்ச்சிகளுக்கு முடிவே இல்லை. ஆனால் இந்த விஞ்ஞானமும் சரி, ஆன்மீகமும் சரி மனித வாழ்வை மேம்படுத்தவே பல்வேறு கோட்பாடுகளை கொண்டுள்ளது. விஞ்ஞானத்தில் ஒரு மனிதனின் ஆளுமை மற்றும் ஆயுளை துல்லியமாக கண்டுபிடிக்க இன்னும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.
நமது முன்னோர்கள் நம்முடைய பிறந்த தேதி, நட்சத்திரம், உடலில் உள்ள அடையாளங்கள் மற்றும் உறுப்புகளை வைத்து நம்மை பற்றி துல்லியமாக கூறும் பல வழிமுறைகளை கூறியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சரியான முடிவை கூறுவதாகவே இருக்கிறது. இந்த வழிமுறைகளில் ஒன்றுதான் விரல்களின் நீளத்தை வைத்து ஒருவரின் ஆயுளை கணக்கிடும் முறையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அது என்ன முறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விரல்கள்
ஆன்மீகம் மட்டுமின்றி விஞ்ஞானத்திலும் உங்களுடைய விரல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். உங்களின் ஆளுமை பற்றியும், உங்களுடைய ஆரோக்கியம் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் கைகளை பார்த்தாலே போதும், குறிப்பாக உங்கள் மோதிர விரலை. நீங்கள் கருவில் இருந்த போது எவ்வளவு டெஸ்டிஸ்ட்ரோன் வெளிப்பட்டது என்பதை உங்களின் மோதிர விரல் குறிக்கும். அதன் நீளம் மற்றும் அகலம் உங்களை பற்றிய பல தகவல்களை கூறக்கூடும்.
பவிஷ்ய புராணம்
முன்னோர்கள் நம்மை பற்றி நாம் தெரிந்துகொள்ள உருவாக்கி வைத்து விட்டு சென்ற நூல்களில் ஒன்றுதான் பவிஷ்ய புராணம் ஆகும். இந்த நூலின் படி உங்கள் உடலில் உள்ள உறுப்புகளை கொண்டே உங்களின் எதிர்காலம் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், ஆயுள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட ஆயுள்
பவிஷ்ய புராணத்தின் படி ஒருவரின் உடலானது நானு கைகளை விட நீளமாகவும் மற்றும் 12 விரல்களுக்கு மேலும் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவர். இதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் பூமியில் நீண்ட காலம் வாழ்வதோடு ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.
மிதமான ஆயுள்
ஒருவரின் உடல் 100 விரல்களின் அளவிற்கு இருந்தால் அவர்கள் சமநிலையுடன் இருக்கும் வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். இவர்களின் ஆயுளும் சராசரியாகத்தான் இருக்கும்.
குறைந்த ஆயுள்
ஒருவரின் உடலானது 90 விரல்களின் நீளத்திற்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள் ஆவர். இவர்கள் மிகவும் சுமாரான வாழ்க்கை வாழ்வார்கள், இவர்களின் ஆயுளும் குறைவுதான். உங்களின் இடது கைதான் உங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும். உங்கள் விரல்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
அதிர்ஷ்டசாலிகள்
உங்களின் மோதிர விரலானது ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஏனெனில் இவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எந்தவொரு சூழ்நிலையில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள இவர்களுக்கு நங்ங்கு தெரியும். அவர்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார்கள் ஆனால் கொஞ்சம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். ஆபத்துதான் விளையாட இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள்இப்படிப்பட்ட ஆண்களுடன் பழக அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெண்களை பொறுத்தவரையில் இப்படி விரல் உள்ள பெண்கள் அவர்களின் துறையில் உச்சத்தை அடைவார்கள்.
எதார்த்தமானவர்கள்
கூடுதலாக இவர்கள் மூர்க்கமாக நடந்து கொண்டாலும் பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்கள் சார்ந்த துறையில் இவர்கள் எப்போதும் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். இவர்களின் நட்பு வட்டாரம் மற்றவர்களை விட எப்பொழுதும் பெரியதாக இருக்கும்.
சிறிய மோதிர விரல்
ஆள்காட்டிவிரலை விட மோதிர விரல் சிறியதாக உள்ளவர்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். தான் செய்யும் அனைத்து காரியங்களிலும் தனக்கான சுதந்திரமும், இடமும் வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மீது ஏற்படும் கவனத்தை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் உறவுகளில் முதல் அடியை எப்பொழுதும் அவர்கள் எடுத்து வைக்க மாட்டார்கள். இவர்கள் வைத்திருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் இவர்களுக்கு தன்னிறைவு என்பது ஏற்படாது.
ஆரோக்கியம்
இவர்கள் எப்பொழுதும் தங்கள் இலட்சியங்களை நோக்கியே பயணிப்பார்கள் அதிலிருந்து எப்பொழுதும் விலக விரும்ப மாட்டார்கள். ஆள்காட்டி விரல் நீளமாக இருப்பவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு, ஆனால் இவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இவர்களுக்கு சில அலர்ஜிகள், எக்சிமா போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சமமான நீளம்
ஆள்காட்டி விரலும், மோதிர விரலும் சமமான நீளத்தில் உள்ளவர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஆனால் அசௌகரியமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது இவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளாவார்கள். இவர்கள் அமைதியை விரும்புபவர்கள்தான் ஆனால் பொறுமை இழக்கும் போது இவர்கல கோபத்தின் வெளிப்பாடு பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே எப்பொழுதும் அவர்கள் நல்ல சூழ்நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களுடன் இருங்கள்.