புனிதமான கோவிலை கூட இப்படி ஆக்கி விட்டார்கள்!! எங்கே செல்கிறது ஆண்மீகம்!!

0
803

புனிதமான கோவிலை கூட இப்படி ஆக்கி விட்டார்கள்!எங்கே செல்கிறது ஆண்மீகம்!

கோவிலுக்குள் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து எரித்து மறைத்து வைத்த கோவில் பூசாரி மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புதுடெல்லியின் ஷாதரா நகரில் உள்ள காந்திநகர் பகுதியில் கோவில் ஒன்று உள்ளது.
இதில் பூசாரியாக இருந்து வருபவர் லக்கான் (வயது 30). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தபொழுது, லக்கானின் மனைவி, சந்திரசேகர் (வயது 35) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த விடயம் லக்கானுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து லக்கானின் மனைவி தனது கணவரிடம் சேகருடன் உள்ள தொடர்பினை முறித்து கொள்வதுடன் அவரை கொலை செய்வதற்கு உதவி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், சேகரை தொடர்பு கொண்ட லக்கானின் மனைவி நம்மிடையே உள்ள தகாத தொடர்பினை தனது கணவர் தெரிந்து கொண்டார். எனவே, டெல்லிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்று கிழமை சேகர் டெல்லி சென்றுள்ளார். அங்கு கோவிலின் பொருட்கள் வைக்கும் அறையில் தம்பதி இருவரும் சேகரை அழைத்து சென்றுள்ளனர்.
அவருக்கு இருவரும் தூக்கமாத்திரைகளை கொடுத்துள்ளனர். அதன்பின் அவரது தலையை பலமுறை அடித்தும், மூச்சு திணற செய்துமுள்ளனர்.
இதில் அவர் இறந்து விட்டார். அதன்பின் அவரது உடலை எரித்து கோவிலின் சரக்கு வைக்கும் அறையில் வைத்து விட்டனர்.
பொலிஸாரை தொடர்பு கொண்ட லக்கான், பொருட்கள் வைக்கும் அறையில் ஒருவர் சிக்கியுள்ளார் என கூறியுள்ளார்.
அங்கு சென்ற பொலிஸார் கருகிய நிலையில் இருந்த சேகரின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
அந்த உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. கட்டாயப்படுத்தி சேகரை உள்ளே கொண்டு சென்ற அடையாளமும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் பூசாரி லக்கானிடம் விசாரணை செய்துள்ளனர். அதன்பின் உண்மையை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
இதனையடுத்து லக்கான் மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: