புத்தாண்டு ராசிபலன் 2020 மிதுன ராசிக்காரங்களே! வெற்றிகரமான ஆண்டில் அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்

0
978

2020ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. இரண்டாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சனி, கேது, குரு, சூரியன், புதன் என ஐந்து கிரகங்கள் கூட்டணி அமைந்துள்ளது. பத்தாம் வீட்டில் சந்திரன் என அமைந்துள்ளது.

2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடையும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடையும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். சரி இனி மிதுனம் ராசிக்கு ஏற்படப்போகும் மாற்றங்களை பார்க்கலாம்.

வெற்றிகரமான ஆண்டு
2020ஆம் ஆண்டு புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இது மிக மிக நல்ல ஆண்டு. ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றியாக அமையும் காரணம். புதன்கிழமை ஆண்டு பிறக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுனம் ராசியையும் ராசியில் உள்ள ராகுவையும் குரு பகவான் பார்க்கிறார். வெளிநாடு வேலைக்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழாம் வீட்டில் சனி, கேது, சூரியன், புதன், குரு என சஞ்சரிக்கின்றனர். குருபகவான் ராசியில் குரு கேது இணைவு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. கெடுதல்கள் நீங்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரப்போகிறது. அப்பாவின் உடல் நலம் அற்புதமாக இருக்கும்.

கல்வி
மிதுனம் ராசிக்கு ராசி நாதன் புதன் ஒரு வருஷம் முழுக்க சந்தோஷமாக பயணிக்கிறார் நல்ல பலன்களை அதிகம் கொடுப்பார். எட்டில் சனி இருந்தாலும் ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் சனி கெடுதல் செய்ய மாட்டார். குரு பார்வை இருப்பதால் சனியோட தடைகளையும் குரு நிவர்த்தி செய்வார். சவால்கள் நிறைந்த சுவாரஸ்யங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கிறார். மாணவர்களுக்கு வெற்றிகரமான ஆண்டு. வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் யோகம் தேடி வருகிறது. காரணம் குரு பார்வை மூளையை உற்சாகமாக வைத்திருக்கும்.

திருமண யோகம்
குரு ஏழாம் வீட்டில் இருப்பதால் வேலையில் அற்புதமான இடமாற்றம் அமையும். சிலருக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. நல்ல நட்பு அறிமுகம் கிடைக்கும். நிறைய பணம் வரும் காரணம் சனி பார்வை இரண்டாம் வீட்டில் விழுகிறது. குரு பார்வை ராசியின் மீது விழுகிறது. என்னதான் வருமானம் வந்தாலும் வரவுக்கு ஏத்த செலவாகத்தான் அமையும். இந்த வருஷம் பணத்தை சேமித்து வைக்க முடியாது.

கணவன் மனைவி உறவு
குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சினை வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க. உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். குரு உங்க ராசியை பார்ப்பதால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக நீங்கும். அஷ்டமத்து சனியாக இருப்பதால் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்க. பொருள் வரவு அதிகமாக இருக்கும். குழந்தைகளின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். வேலையில் புரமோசன் கிடைக்கும். மூச்சு பிரச்சினைகள் வரலாம் மருத்துவ ஆலோசனை எடுத்துக்கங்க.

சிவ ஆலய தரிசனம்
பயணங்களின் கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. காரணம் அஷ்டமத்து சனி பணத்தை யாருக்கு கொடுத்தாலும் திரும்ப வாங்க முடியாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருங்க இல்லாட்டி உள்ளதும் போச்சுன்னு உட்கார்ந்து இருக்கணும். சிவ ஆலயங்களுக்கு போய் சனிக்கிழமை போய் தீபம் ஏற்றி தரிசனம் பண்ணிட்டு வாங்க நல்லதே நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2020 புத்தாண்டு ராசி பலன்கள்: கடக ராசிக்காரர்களே! தேடிவரும் வெளிநாடு யோகத்தால் அடிக்கும் அதிர்ஷ்டம் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 25.11.2019 திங்கட்கிழமை !