புதைக்கப்பட்ட பிணம் வெளியே வந்ததால் பரபரப்பு!! ஏன் இந்த கொடுமை!!

0

புதைக்கப்பட்ட பிணம் வெளியே வந்ததால் பரபரப்பு!! ஏன் இந்த கொடுமை!!

மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு நேரு நகரில் உள்ள மயானத்தில் புகைப்பட்ட பிணம் மழையால் வெளியே வந்து மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மயானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

பொதுமக்கள் இறந்துபோனவர்களை அடக்கம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மக்கள் பலமுறை மேட்டூர் நகராட்சிக்கு தெரிவித்தும், நகராட்சி சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் ஆதரவற்ற பிணம் ஒன்றை நகராட்சி நிர்வாகத்திடம் அடக்கம் செய்ய சொல்லி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஊழியர்கள் முறையாக அடக்கம் செய்யாமல் விட்டதாக கூறப்படுகிறது. மயானத்தில் புகைத்தக்கப்பட்ட பிணம் மழை நீரில் மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சி கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டிவிட்டது…
Next articleபாத்திரம் தேய்த்த பெண் 12 நாட்களில் பேஷன் லீக் மாடல் ஆகிவிட்டார் எப்படி கிடைத்தது அதிஸ்டம்!!