பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஜோடி. பிணமாக கிடந்த பரிதாபம். என்ன நடந்தது தெரியுமா?

0
421

மீஞ்சூர் அருகே கேசவபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கடந்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் வெகுநேரமாக வீட்டை திறக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கதினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது வெங்கடேத் தூக்கில் தொங்கிய படியும், தனலெட்சுமி படுக்கையில் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இருந்தனர். இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டை சோதனை செய்த போது ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் எங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. தனலெட்சுமி கைப்பட எழுதிய கடிதம் என்றாலும் இளஞ்ஜோடிகளின் தற்கொலைக்கு என்ன காரணம் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக நேற்று வெங்கடேசுக்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி சேர்ந்து கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளுக்கு வெட்டப்பட்ட கேக்கும் வீட்டில் இருந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: