பிறந்தநாளன்று வைரலாகும் புகைப்படம், தந்தை மற்றும் தாயுடன் இருக்கும் நயன்தாரா!

0
816

பிறந்தநாளன்று வைரலாகும் புகைப்படம், தந்தை மற்றும் தாயுடன் இருக்கும் நயன்தாரா!

தமிழ் சினிமாவில் நடிகையாக நிலைப்பது எல்லாம் ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஆனால், 14 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் லேடி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகை நயன்தாரா அஜீத்துடன் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஒருவேளை வைஷ்ணவி ஐடியாவோ. கிண்டலுக்குள்ளான புகைப்படம். இன்று (18 நவம்பர்) நயன்தாரா தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை மற்றும் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை நயன்தாராவின் தந்தை, குடியன் கொடியட்டு இந்திய விமான படையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

இதனாலேயே நயன்தாரா இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் படித்துள்ளார். நயன்தாரா ஜாம்நகர், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் தனது பள்ளிப்படிப்பை படித்துள்ளார். மேலும் திருவல்லாவில் உள்ள மார்த்தா கல்லூரியில் ஆங்கில இளநிலை படிப்பை முடித்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவிற்கு லெனோ என்ற அண்ணனும் இருக்கிறார். தற்போது இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனாலேயே நயன்தாரா அடிக்கடி துபாய்க்கு செல்வதும் வழக்கம். தற்போது நயன்தாரா தனது பிறந்தநாளை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் நகரில் கொண்டாடி வருகிறார். நடிகை நயன்தாரா கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேர மாடலாக பணியாற்றி வந்தார்.

பின்னர் இவரை சத்யன் என்ற இயக்குனர் சந்தித்து ‘மனசினகாரே’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். முதலில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று நயன்தாரா கூறி இருக்கிறார். ஆனால், ‘மனசினகாரே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவே தனது நடிப்பைத் தொடர்ந்தார் நயன்தாரா. அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்த நயன்தாராவிற்கு தமிழில் ‘ஐயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்/ அதன் பின்னர் தமிழில் உள்ள விஜய் விக்ரம் சூர்யா தனுஷ் சிம்பு என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் நயன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றே கொண்டாட்டத்தை துவங்கிய காதலர், நாளை நயனின் பிறந்தநாள், வைரலாகும் புகைப்படம்!
Next articleபத்திரிக்கையில் வெளியான ஷாக்கிங் புகைப்படம், இரவு பார்ட்டியில் தெலுங்கு நடிகருடன் குடி போதையில் டிடி உல்லாச நடனமா ?