பிறக்கும் 2019 ஜனவரி மாத பலன்கள்! அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லப்போவது எந்த ராசி?

0

பிறக்கும் 2019 ஜனவரி மாத பலன்கள்! அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லப்போவது எந்த ராசி?

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுகஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்பப்படும். ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு மனை வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும்.

பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும் வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.

கலைத்துறையினர் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்.

மாணவர்கள் படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்தி தரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பரணி:
இந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

கார்த்திகை:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு – களத்திர ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள். பெற்ற புகழுடன் புதிய புகழும் வந்து சேரும். ஆன்மீக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். லாபவிகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு.

அரசியலில் உள்ளவர்கள் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம்.

கலைத்துறையினர் சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள்.

மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும.

கார்த்திகை:
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

ரோகினி:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள்.

தொழிலதிபர்கள் கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான கலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும்.

கலைத்துறையினர் சினிமா நாடகம் சின்னத்திரை ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.

மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 28, 29

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள். உங்களுக்கு சுக வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தஆண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம்,விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

இந்த புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளின் கல்யாணத்திற்காக வரன் தேடி ஓய்ந்தீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன் அமைவார். கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். 12.02.2019 வரை ராசிக்கு 7ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்துச் செல்லும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்று மதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.

குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். இந்தஆண்டு முழுக்க சனி 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற
வேண்டாம். புதிய வேலை கிடைக்கும்.

மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அநாவசியமாக மேலிடத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரிகளே! அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு.கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விரும்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள்.

கலைஞர்களே! புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும். அரசு பாராட்டும்.

விவசாயிகளே! சென்றாண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரி கட்டுவீர்கள். மரப்பயிர்களால் காசுபணம் பார்ப்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதுடன், முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.

பரிகாரம் :

காஞ்சிபுரத்தில் அருட்பாலிக்கும் அருள்மிகு ஏகாம்பர நாதேஸ்வரரை தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு – சுகஸ்தானத்தில் புதன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். அரசு மற்றும் தனியார் துறைகளிளல் பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேத்துடன் கெயல்பட்டு மன நிறைவு பெறுவார்கள்.

பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த காலகட்டம் இது. நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.

கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும்.

மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெறிபடுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும்.

மகம்:
இந்த மாதம் பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

பூரம்:
இந்த மாதம் சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.

உத்திரம்:
இந்த மாதம் புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் – சுகஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.

அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது.

கலைத்துறையினர் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். இசைக்கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள்.

மாணவர்கள் மெக்கானிக்கல் பயிற்சிபெறும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும்.

உத்திரம்:
இந்த மாதம் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

சித்திரை:
இந்த மாதம் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – சுகஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் கடந்த காலங்களில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள் வீடு மனை வாகனம் ஆகியவற்றில் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்வதால் சிறு சிறு இறக்கங்கள் உருவாகும்.

வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். காகிதப்பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும்.

பெண்கள் நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.

கலைத்துறையை சார்ந்தவர்கள் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுக்கவும்.

மாணவர்கள், கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும். படிப்பில் சிறந்த நிலையை அடைய இந்த காலகட்டத்தை பயன்படுத்தவும்.

சித்திரை:
இந்த மாதம் பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.

ஸ்வாதி:
இந்த மாதம் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

விசாகம்:
இந்த மாதம் சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும்.

தொழிலதிபர்கள் தங்கநகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரை தற்காத்துக் கொள்வதற்கு இந்த காலகட்டம் மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்.

மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும்.

விசாகம்:
இந்த மாதம் நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.

அனுஷம்:
இந்த மாதம் விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

கேட்டை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், சுக்ரன், சனி – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள்.

தொழிலதிபர்கள் புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்துறையினர் உங்களின் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள். அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் நடந்து ஏற்றம் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள்.

மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

மூலம்:
இந்த மாதம் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

பூராடம்:
இந்த மாதம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும்.

உத்திராடம்:
இந்த மாதம் வீண் செலவு ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும். தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள். கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும்.

தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்களச் செலவுகளை உருவாக்கித் தரும்.

பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் வாழ்க்கைக்கு தேவையான சுக சவுகரியங்களைப் பெற வேண்டிய ஏற்பாடுகளையும் செயல்படுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும்.

கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவுவீர்கள்.

உத்திராடம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

திருவோணம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.

அவிட்டம்:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24 , 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும்.

வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்வது சிறந்தது.

அரசியல்வாதிகள் மக்களுக்காக சேவை செய்வதில் சில காலம் மந்தமாக செயல்பட்டு வந்தவர்கள் எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்.

மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மார்க் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும்.

அவிட்டம்:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

ஸதயம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பூரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
சுகஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி – லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும. நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்.

அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரலாம். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும்.

தொழில்திபர்கள் தங்கள் தொழிலில் வெற்றியும் புகழும் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தங்கள் தொழிலை வளர்த்துக் கொள்வார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனமுடன் யெல்படுவது நல்லது.

அரசியல்வாதிகள் அனுகூல செயலபாட்டை தேவையான நேரத்தில் தடையின்றி பெறுவார்கள். பிறருக்கான நடத்தி தரவேண்டிய பணிகள் நடக்கும். ஆன்மீக எண்ணங்கள் செயல்பாடுகளாக மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வகாரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும்.

மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறும் மாணவர்கள் தகுந்த சமயத்தில் சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

பூரட்டாதி:
இந்த மாதம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.

ரேவதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டின் அதிஸ்ட வாழ்க்கை எந்த ராசிக்கு கிடைக்கும்! கிரகநிலை புத்தாண்டு பலன்கள் 2019!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 01.01.2019 செவ்வாய்க்கிழமை!