பிரியா பிரகாஷ் வாரியரை பின்னுக்கு தள்ளிய தீஷா பதானி!

0
242

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை பின்னுக்கு தள்ளும் தீஷா பதானியின் புதிய வீடியோ…!

தமிழ் திரையுலம் உள்பட நாடு முழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டும் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார்.

இதையடுத்து, பிரியா வாரியர் என்றாலே இவர் இடம்பெற்றுள்ள கண் சிமிட்டும் பாடல் காட்சிகள் கண் முன்னே தோன்றும் அளவிற்கு இவர் கண் சிமிட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

View this post on Instagram

#ChillKaro with NESCAFE Cold Coffee… @nescafeindia #NescafeColdcoffee

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

தீஷா பதானி கண்சிமிட்டல்
இதையடுத்து, பிரியா பிரகாஷ் வாரியர் போன்று பாலிவுட் நடிகையான தீஷா பதானி கண் சிமிட்டியப்படி காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காபி விளம்பரம்
மேலும், தீஷா பதானியின் கண் சிமிட்டும் இப்புகைப்படமானது ஒரு காபி பிராண்டின் விளம்பரத்திற்காக அவர் இத்தகைய வேடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த விளம்பரம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: