பிரியங்கா வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் ! நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை!

0
754அதிகளவு மது அருந்தியதன் காரணமாக முழு போதையில் இருந்ததால் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை என பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான நால்வரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 26 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஷிவா மற்றும் கேஷவலு ஆகியோர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என தெரியவருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரிடமும் பொலிசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில், சம்பவத்தன்று எங்களுக்கு வேலை இல்லாமல் லொறியுடன் வெறுமனே உட்கார்ந்திருந்தோம், எங்களிடம் பணமும் இல்லை.

இந்நிலையில் ஒரு இடத்தில் இருந்து இரும்பு கம்பிகளை நாங்கள் திருடி வைத்திருந்தோம்.

அதை எடுத்து கொண்டு போய் விற்றதில் பணம் கிடைத்தது. இதன்பின்னர் அந்த பணத்தில் மதுவாங்கி தொடர்ந்து பல மணி நேரமாக குடித்தோம்.

பின்னர் தான் பிரியங்காவை இழுத்து கொண்டு போய் பலாத்காரம் செய்தோம், ஆனால் போதை தலைக்கேறியதால் நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை.

ஆனால் அவரை உயிரோடு விட்டால் எங்களை காட்டி கொடுத்துவிடுவார் என எண்ணியே கொலை செய்து உடலை எரித்தோம் என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: