பிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி !

0
280பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் என உறுதி செய்துள்ள பொலிசார், அவர்களின் மரணம் குறித்து பகீர் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

லொரியில் சடலங்களாக மீட்கப்பட்ட அத்தனை பேரும், குளிரூட்டப்பட்ட கல்லறை போன்ற ஏதேனும் அறையில் சிக்கி, தப்ப முடியாமல் மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச அளவில் இந்த விசாரணையை முன்னெடுக்க இருப்பதாக கூறும் அதிகாரிகள் தரப்பு, மனித கடத்தல் கும்பலை முக்கியமாக குறிவைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள 25 வயது இளைஞர் மீது கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

இதனிடையே கென்ட் பகுதியில் அமைந்துள்ள எம் 20 சாலையில் லொரி ஒன்றில் இருந்து 9 புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்டுள்ளதாக பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

எசெக்ஸ் நகரில் லொரியுடன் சிக்கிய சடலங்கள் அனைத்தும் மூச்சுத் திணறியதால் மரணமடைந்தார்களா அல்லது பனியில் உறைந்து மரணம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சடலங்களுடன் சிக்கிய அதுபோன்ற ஒரு லொரியின் உள்ளே வெப்பநிலை -25C வரை சரியும் எனவும், அதில் சிக்குண்டால் மரணம் உறுதி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் லொரியின் உள்ளே வெப்பநிலையை கட்டுப்படுத்துவது சாரதியின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது இந்த சடலங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் சாரதியிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தெரியவரும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கருதி தற்போது அந்த லொரியானது ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: