பிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்!

0
417

பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியினருக்கு மூன்றாவதாக குட்டி இளவரசர் பிறந்துள்ளார்.

இதன் மூலம் அரியணை ஏறும் பட்டியலில் குட்டி இளவரசர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இவரது பிறப்பால், அரச குடும்பத்தின் அரியணை பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இவர், ஐந்தாவது இடத்தில் இருப்பதால் இளவரசர் ஹரி 6 வது இடத்திற்கு மாற்றம் ஆகியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் விரைவில் அரசியாக அரியணை ஏறி புதிய வரலாற்றை உருவாக்கவிருக்கிறார்.

மூன்றாவது குழந்தை பிறந்துவிட்டதால், அரச குடும்பத்தில் சார்லோட் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

ஏனெனில், Crown Act of 2013 சட்டத்தின்படி, இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த சார்லோட் பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியாக அரியணையில் அமரவிருக்கிறார். அரச குடும்பத்தின் முதல் பெண் அரசியாகவிருக்கிறார்.

இதே நேரம், இளவரசர் ஜார்ஜ் ஒரு பெண் குழந்தையாக இருந்திருந்தால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், ஜார்ஜ்க்கு முன்னர், அவரது தாத்தா சார்லஸ் மற்றும் தந்தை வில்லியம் ஆகிய இருவரும் அரியணை ஏறுவதற்கு வரிசையில் இருப்பதால், அவர்களுக்கு பின்னர் தான் இவருக்கு க்ரீடம் சூட்டப்படும்.

எனவே, பெண் குழந்தைகளின் வரிசையில் இளவரசி சார்லோட் முதலில் இருக்கிறார். 1701 ஆம் ஆண்டில் அரச குடும்ப சட்டப்படி, சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு முன்பாகவே எப்பொழுதும் பொறுப்பை ஏற்பார்கள்.

ஆனால், Crown Act of 2013 சட்டத்தின் படி இதில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகன்னத்தில் அறைந்த விவகாரம்: சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!
Next articleஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்!