பிரபல நாட்டுப்புற சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மருத்துவரான மகள் பல்லவி காணாமல் போயுள்ள நிலையில் புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது !

0

பிரபல நாட்டுப்புற சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மருத்துவரான மகள் பல்லவி காணாமல் போயுள்ள நிலையில் புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது !

பிரபல நாட்டுப்புற சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள 24 வயதாகும் மூத்த மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்லவியைத் தேடி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமையன்று தன்னுடைய‌ காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார் பல்லவி. ஆனால், அதன் பின், பல்லவி வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இந்நிலையில், பல்லவி தன்னுடைய முகநூல் பக்கத்தில் “நான் காணாமல் போகவில்லை, யாரும் என்னை கடத்தவில்லை, நலமாக உள்ளேன், தவறான தகவல்களை நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பல்லவி கடத்தப்பட்டாரா? அவருடைய முகநூல் காக் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்றுவருகிறது.

இங்கே கிளிக் செய்து வீடியோ பார்வையிடவும்!

Fake news

Posted by Pallavi Agarwal P K on Monday, December 16, 2019

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Vazhkai Thunai Nalam Adhikaram-6 திருக்குறள் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம்-6 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleThirukkural Makkatperu Adhikaram-7 திருக்குறள் புதல்வரைப் பெறுதல் (மக்கட்பேறு) அதிகாரம்-7 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil