பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொலை!

0

பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராகவி பொலிஸாரிடம் அளித்துள்ள புகாரில், சசிகுமார், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடன்சுமை காரணமாக, அவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகை ராகவி, தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, மருதுபாண்டி, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

மேலும் சின்னத்திரையில் திருமதி செல்வம், மகாலட்சுமி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan ! இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை – 25.10.2019 !
Next articleசவாரி செய்ய வரும் நபர்களை கண்டால் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் குதிரை.. வைரல் காட்சி!