பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை கைது!

0
497

சென்னையில் மின் சாதனப் பொருட்கள் விற்பனையகம், டிராவல்ஸ் நடத்தி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிசா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனிஷா என்கிற பூர்ணிமா, பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார்.

இவரது கணவர் சக்தி முருகனும், அனிசாவும் சேர்ந்து ஸ்கை எக்யூப்மன்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரின் நிறுவனத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் 101 வீட்டு உபயோக ஏ.சி.க்களை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இதற்கு அனிசா கொடுத்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதனால் ஏ.சிக்களை விற்பனை செய்த பிரசாந்த் குமார் நேரில் சென்று கேட்ட போது பணத்தை தர முடியாது என அனிசா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் அனிசா மற்றும் அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மீது பிரசாந்த்குமார் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அனிசாவையும் அவரது கணவரின் தம்பி ஹரிக்குமாரையும் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான அனிசாவின் கணவர் சக்தி முருகனை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: