பிப்ரவரி 24 தொடக்கம் சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள்!

0

சனி பகவான் 2022 ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். 2022 பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார்.

ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீடான தொழில் வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள், இக்காலத்தில் பணியிடத்தில் ஒரு பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது.

பல புதிய வேலை வாய்ப்புக்களை உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

ரிஷபம்

சனி உதயமாகும் போது ரிஷப ராசியில் ராஜ யோகம் உருவாகிறது. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலைகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இக்காலத்தில் பெரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் கூட்டு பணிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். இரும்பு, எண்ணெய் மற்றும் சுரங்கம் போன்ற சனி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் வாகனம், தாய் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் வீடான 4 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.

சனிக்கும் சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்காக பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.

இக்காலத்தில் வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்து நற்பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் கௌரவம் இக்காலத்தில் உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுருவும், சூரியனும் சனியின் ராசிக்குள் புகுந்து பயணிப்பதால் இந்த 5 ராசிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!
Next articleஇன்றைய ராசி பலன் 22.02.2022 Today Rasi Palan 22-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!