பிணவறையில் பாதுகாக்கப்பட்ட சடலம்! இறந்த 21 நிமிடங்களில் உயிர் பெற்ற பிரித்தானியர்!

0
394

தென்மேற்கு இங்கிலாந்தில் மாரடைப்பால் இறந்த நபர் ஒருவர் பிணவறையில் இருந்து உயிருடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளோசெஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 48 வயதான ஜோவோ அரூஜோ என்பவரே மரணத்தில் இருந்து வியப்பளிக்கும் வகையில் மீண்டு வந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தமது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று சாலையோரம் வாகனத்தை நிறுத்திய ஜோவோ அரூஜோ கடும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளார்.

அச்சத்தில் உதவிக்கு அலறிய அவரது மனைவியின் குரல் கேட்டு அங்கே கூடிய பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளனர்.

இதனிடையே சம்பவ பகுதிக்கு விரைந்துவந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைப்பிரிவினர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

நீண்ட 6 மணி போராட்டத்திற்கு பின்னர் ஜோவோ அரூஜோ மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறுதிகட்ட பரிசோதனைக்கு முன்னர் சடலத்தை பிணவறைக்கு மாற்றியுள்ளனர்.

ஜோவோ அரூஜோ மரணமடைந்த தகவல் போர்த்துகளில் உள்ள அவரது பெற்றோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 21 நிமிடங்களுக்கு பின்னர் நர்ஸ் ஒருவர் ஜோவோ அரூஜோவின் உடலில் உயிர் இருப்பதை அறிந்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பிணவறையில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். தொடர்ந்து நடந்த சிகிச்சையினால், 3 நாட்கள் கோமாவில் இருந்த ஜோவோ அரூஜோ இறுதியில் கண் திறந்துள்ளார்.

மேலும் 2 வார தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஜோவோ அரூஜோ தமது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

ஜோவோ அரூஜோ விவகாரத்தில் அவரது மூளை உரிய சமிக்ஞையை இதயத்திற்கு அனுப்பவில்லை எனவும், அதனாலையே அவருக்கு மரணம் நேர்ந்தது எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகமல்ஹாசனின் அதிர்ச்சி அறிவிப்பு!
Next articleபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு! நம்பமுடியாத அரிய காட்சி!