Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் பிரபலத்தின் அதிரடி கருத்து! எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது!

பிக்பாஸ் பிரபலத்தின் அதிரடி கருத்து! எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது!

0
524

பிக்பாஸினால் மக்கள் அனைவருக்கும் நம்ம வீட்டுப் பெண்ணாக மாறிய ரித்விகா சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

தற்போது மீ டு குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களையும், தான் சந்தித்த அந்த கஷ்டமான தருணத்தினையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ரித்விகா கூறுகையில், மீ டு பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச வேண்டும். சின்ன வயதில் அந்த மாதிரியான தருணங்களை கடந்து தான் நான் வந்துள்ளேன்.

தற்போது குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து பெற்றோர்கள் அதிகமாக கூறி வருவதால் அவர்கள் அதனை மறைக்காமல் பெற்றோர்களிடம் கூறி விடுகிறார்கள். ஆனால் நான் சற்று விபரம் தெரிந்த பின்னே இது தவறு என்று புரிந்து கொண்டதாகவும், அதன் பின்பே அம்மாவிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸின் டைட்டில் வின்னரான ரித்விகா உள்ளே செய்த சில குறும்புகளைக் குறித்தும் கூறியுள்ளார். அதிலும் நம்மில் யாருக்கும் தெரியாத வேலையை ரித்விகா செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அப்பளம் கொடுக்கமாட்டார்கள் என்பதால் ஆச்சி மசாலா ஒரு டாஸ்க் வைத்திருக்கும் போது அதை பிக்பாஸிற்கு தெரியாமல் அப்பளத்தை சுட்டு அதனை சமையலறையிலும் வந்து சுட்டுக் கொண்டிருக்கும் போது பிக்பாஸ் கண்பெக்ஷன் அறைக்கு வாங்க என்று குரல் கேட்டுள்ளது.

அதற்கு மிகவும் பயந்து உள்ளே சென்ற ரித்விகாவினை பிக்பாஸ் எதற்கு பயப்படுறீங்க என்று கேட்க, அவரும் அப்பளக்கதையினைக் கூறியுள்ளார்.. ஆனால் பிக்பாஸ் அதனைக் கண்டுகொள்ளாமல் நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின்பு இதுவரை கம்பீர குரலாக நமக்கு தெரிந்த பிக்பாஸ் உள்ளே ஒரு கட்டத்தில் டாஸ்க் ஒன்றில் “இவங்களுக்கு இது கூட தெரியலையா” என்ற நோக்கத்தில் சிரித்துவிட்டதையும் தற்போது கூறியுள்ளார்.

பிக்பாஸ் முடிந்து தனக்கு வர வேண்டிய பணம் இன்னும் வரவில்லை என்றும் அதற்கான செயல்முறை நடந்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது ஒரு படத்திற்கு கமிட் ஆகிருப்பதாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியுடன் நான் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய்யைக் குறித்துக் கூறுகையில், சமீபத்தில் அவர் பேசிய கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முனும், உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்ற வசனம் பிடித்துள்ளதாகவும், அவர் உண்மையான வாழ்க்கையிலும் இவ்வாறு தான் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

Previous articleஇணையத்தை கலக்கும் காணொளி! யாழ். இளைஞர்களின் மனிதாபிமானம்!
Next articleகதறும் நடிகை! ஆடையை கழற்று ஆபாசமாக பேசிக்கொண்டே என் அருகில் வந்தார்!