பிக்பாஸை வாழ வைத்த ஐஸ்வர்யா!

0
314

ஒருவழியாக மக்களின் விருப்பமானவரை வெற்றியாளர் என்று தெரிவு செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. ஆனாலும் இதில் நடந்த தில்லுமுல்லு அதிகம் என்றே கூறலாம்.

பிக்பாஸ் ஆரம்பித்த உடனே சீசன் 1 போன்று இந்நிகழ்ச்சி இல்லை என்பது பலரது கருத்தாகவே இருந்துவந்தது. அதே போல் மக்களிடமும் அவ்வளவாக வரவேற்பினைப் பெறாமலே இருந்தது.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவின் ராணி மகா ராணி டாஸ்க் ஒட்டுமொத்த மக்களையும் பிக்பாஸ் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதிலும் அவர் குப்பைக் கொட்டி, ராட்சஷியாக அனைவரிடமும் நடந்து கொண்ட பின்பே சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம்.

அதன்பின்பு ஐஸ்வர்யா ஆர்மி, மும்தாஜ் ஆர்மி என போட்டி போட்டு உருவாக ஆரம்பித்தது. எந்த அளவிற்கு பார்வையாளர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வைத்தாரோ அந்த அளவிற்கு மக்களிடம் வெறுப்பினையும் சம்பாதித்தார்.

மிகவும் கொலைவெறியுடன் ஐஸ்வர்யாவை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்த மக்களிடம் இருந்து பிக்பாஸ் மிகவும் சாமர்த்தியமாக தனது தோழியை வைத்து காப்பாற்றியது. அதனால் மக்களிடம் கெட்ட பெயரையும் பிக்பாஸ் சம்பாதித்தது.

அவ்வாறு வாங்கிய கெட்டப்பெயரை வாரா வாரம் கமல் வந்து சரிசெய்துவிட்டு சென்று கொண்டிருந்தார்.

எலிமினேட் ஆனவர்களின் பேட்டி
பின்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக செல்பி வீடியோவை வெளியிட்டு ஏதாவது ஒரு உண்மையை மறைமுகமாக கூறியதால் அதிலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

ஐஸ்வர்யாவால் ஓடிய பிக்பாஸ்
ஒரு கட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யாவின் மீது மக்களுக்கு கோபம் தனிய அதன் பின்பு ராணி மகா ராணி இல்லையென்றால் பிக்பாஸ் இந்த அளவிற்கு சென்றிருக்காது என்ற எண்ணம் ஏற்பட வைத்தது பிக்பாஸ்.

அதன்பின்பு பிக்பாஸ் வீட்டின் மருமகளாகவும் ஆனார் ஐஸ்வர்யா… பிக்பாசும் அவருக்கு மிக நன்றாகவே தாளம் போட ஆரம்பித்தது. இதில் ஜீரணிக்கமுடியாத விடயம் என்னவென்றால் எதுவும் அறியாத செண்ட்ராயனை பிக்பாஸ் குறைவாக வாக்கு பெற்றவர் என்று அறிவித்தது தான். அதற்கு கமலும் ஒரு சாட்சியை மக்களிடம் காண்பித்தார். ஆனால் அதை அவதானித்த மக்கள் கொஞ்சம் கூட நம்பவில்லை.

அதன்பின்பு அனைவருக்கும் போட்டியாக நினைத்த யாஷிகா வெளியேற்றப்பட்டார். கடைசியில் ஐஸ்வர்யா இல்லை என்றால் பிக்பாஸ் இல்லை என்ற நிலைக்குச் சென்றது.. ஐஸ்வர்யா என்ற போட்டியாளர் இல்லை என்றால் ரித்விகாவிற்கும் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பதில் சந்தேகமமே…..

ஆனாலும் ஐஸ்வர்யா பிக்பாஸ்க்கு ஏற்கெனவே நெருக்கமானவர் என்று கூறப்பட்டுவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கிய நிறுவனமான எண்டோமாலில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா மூன்று தடவை சென்றுள்ளார்.

மக்களுக்கு இதெல்லாம் தெரியவர ஐஸ்வர்யாவை வின்னர் ஆக்கினால் பிக்பாஸின் அடுத்த சீசன் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியாது என்றும் சுதாரித்து ரித்விகாவை வின்னராக அறிவித்திருக்கின்றது என்பது பலரது கருத்தாகவே உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: