‘பிகில்’ படத்தின் டீசர் எப்போது? அர்ச்சனா கல்பாதி தகவல் !

0

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது

உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் இந்த படம் ஓபனிங் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தில் கிட்டத்தட்ட முழு வியாபாரமும் முடிந்துவிட்டதாகவும், இந்த வியாபார தொகை தமிழ் சினிமாவின் ஆச்சரியப்பட வைக்கும் தொகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக இந்த படத்தின் டீசர் எப்போது? என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்த திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அக்டோபர் முதல் வாரத்தில் ‘பிகில்’ டீசர் வெளியாகும் என்று கூறியுள்ளார். அக்டோபர் முதல் வாரம் இன்றுதான் ஆரம்பித்துள்ளதால் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் ‘பிகில்’ படத்தின் டீசர் வெளியாகும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமக்களிடம் பிக்பாஸ் தர்ஷன் கேட்ட மன்னிப்பு!
Next articleசுக்கிரன் பெயர்ச்சி 2019 : சுக்கிரனால் இந்த ராசியின் வாழ்க்கையே திசை மாற போகின்றது? விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?