பாலுணர்வைத் தூண்டும் சிறந்த 9 பழங்கள்!

0
1247

இன்றைய காலத்தில் கருவுறுதல் பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கிறது. இத்தகைய பிரச்சனை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் தான் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சனை ஏற்படும். சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இருக்காது. அதனால் அவர்களால் உறவில் சரியாக ஈடுபட முடியாது.

குறிப்பாக காதலர் தினத்தன்று நன்கு ரொமான்ஸ் செய்யலாம் என்று ஆசையாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களால் சரியாக ரொமான்ஸ் செய்ய முடியாது. அதற்கு காரணம் பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக செயல்படாததே ஆகும். அதற்காக கவலைப் பட வேண்டாம். காதலர் தினத்தன்று மட்டும் தான் ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என்ன? காதல் செய்பவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷலான காதலர் தினம் தான். எனவே மனதை தளர விடாமல், பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான விடையை தேடுங்கள்.

மேலும் அதற்கான ஒரு விடையையும் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, உணவுகள் தான். பொதுவாக கடல் சிப்பிகள் பாலுணர்வைத் தூண்டும் ஒரு சிறந்த உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி காய்கறிகள், நட்ஸ், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவையும் பாலுணர்வைத் தூண்டும் என்று தெரியும். இவற்றைத் தவிர பழங்களை சாப்பிட்டாலும், பாலுணர்வை அதிகப்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், உண்மையில் பழங்களில் ஒருசிலவற்றில் பாலுணர்வைத் தூண்டும் பொருளானது உள்ளது. எனவே அவற்றை சாப்பிட்டு, பாலுணர்வை அதிகப்படுத்தி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள். சரி, இப்போது அந்த பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஸ்ட்ராபெர்ரியில் கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் பி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. மேலும் இதை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரும்பு சக்தி மட்டும் கிடைப்பதில்லை. அவை பாலுணர்வை அதிகரிக்கும் ஹார்மோன்களையும் தூண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாலியல் உறுப்புகளை நன்கு ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.

அத்திப்பழத்திலும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதலின் அளவையும் அதிகரிக்கும்.

அவகேடோ உடல் மற்றும் சருமத்திற்கு மட்டும் நன்மை தரும் பழம் அல்ல. இது பாலுணர்ச்சியைத் துண்டும் பழங்களிலும் சிறந்த ஒன்று. எனவே இதனை அதிகம் சாப்பிடுவதால், கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெர்ரிப்பழங்களில் ஒன்றான கோஜி பெர்ரி ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள பாலிசாக்கரைடுகள் ஆண்களில் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

லிச்சி இந்த இனிப்பான மற்றும் சாறு அதிகம் உள்ள பழத்தில் உறவில் அதிக நேரம் ஈடுபட வைக்கும் வைட்டமின் சி, காப்பர் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இந்த பழத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். செர்ரி சில செர்ரிப் பழங்கள் பெரோமோனின் உற்பத்தியை தூண்டும். எனவே இதனை சாப்பிட்டால், காதல் வாழ்க்கை மிகவும் உற்சாகமாக இருக்கும்.

இளநீர் குடித்தால், புத்துணர்ச்சி மட்டும் கிடைப்பதில்லை, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. அதிலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக வைக்கும். அதனால் பாலுணர்ச்சியின் அளவும் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article‘இது சரியான நேரம் இல்லை’: புல்வாமா தாக்குதலின்போது, கிரிக்கெட் தொடர்பாக ட்வீட் செய்த கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Next articleவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க!