பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்!

0

பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்!

பாலிவுட் நடிகர் இர்பான் கான் அரிய வகை புற்றுநோயின் பாதிப்பால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது திடீர் மறைவினால் சினிமா நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இர்பான் கான் இறந்துவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது மிகவும் சோகமான மற்றும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒரு சிறந்த திறமைசாலி, ஒரு அன்பான சக நடிகர், சினிமா உலகத்திற்கு நிறைவான தனது பங்களிப்பை தந்தவர். ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றுவிட்டார்” என கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதன் பெயரில் வெளியான ஆ பா ச படத்திற்கு லாஸ்லியா கொடுத்த பதிலடி!
Next articleஏ.ஆர். முருகதாஸின் வெப் தொடரில் வாணி போஜன்.