பாலியல் உறவின் மூலமும் டெங்கு வைரஸ் பரவும் ஆய்வில் உண்மையை கண்டுபிடித்த மருத்துவர்கள்!

0
1028

தற்போது தமிழகம் எங்கும் டெங்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உடலுறவு மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் என்று மருத்துவர்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

மழைக்காலம், குளிர்க்காலம் என்றாலே மக்களிடம் வைரஸ் காய்ச்சல் குறித்த அச்சம் தொற்றிக் கொள்கிறது. தற்போது அது டெங்கு காய்ச்சலாக இந்தியாவையே அச்சுறுத்தியுள்ளது.

இந்த டெங்கு காய்ச்சலால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமே பரவும் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது வேறு விதமாகவும் பரவும் என்று நிரூபிக்கும் சம்பவம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

அதாவது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

உடனடியாக மருத்துவமனை சென்ற அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த அவருக்கு டெங்கு வைரஸால் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் வசித்து வந்த இடம் டெங்கு கொசுவால் பாதிப்பு இல்லாத இடம் என்பதால், அவருக்கு டெங்கு வைரஸ் தொற்று எப்படி பாதித்தது என்பது மருத்துவர்களுக்கு புரியவில்லை.

இந்நிலையில் மருத்துவர்கள் நடத்திய விரிவான ஆய்வில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் துணையுடன் அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரது விந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது டெங்கு வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் அதில் இருந்தன.

இதையடுத்து , பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொது சுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 13.11.2019 புதன்கிழமை !
Next articleவரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்டி இருக்கும் வார ராசிபலன்!