பாலியல் அடிமைகளாக 240 பெண்கள்! வெளிச்சத்துக்கு வந்த தகவல் !

0
1056

உலகின் பல நாடுகளில் கிறிஸ்தவர் பாதிரியார்கள் சிறார்களிடம் தங்கள் பாலியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துவரும் நிலையில்,

பிரேசில் நாட்டில் கிறிஸ்தவ தேவாலய இளைஞர் குழு தலைவர் ஒருவர் சுமார் 240 பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

மினாஸ் ஜெராய்ஸ் மாகாணத்தில் உள்ள Muriaé நகரில் செயல்பட்டுவரும் ஒரு தேவாலயத்தின் இளைஞர் குழு தலைவராக பணியாற்றி வருகிறார் 32 வயதான Roney Schelb.

இவரே கடந்த நான்காண்டு காலமாக பிரேசிலின் 11 மாகாணங்களில் இருந்து சுமார் 240 பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி சீரழித்துள்ளார்.

அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு 970 டொலர் முதல் 2,400 டொலர் வரை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

இவரது வலையில் பல அப்பாவி பெண்களும் ஏமாந்துள்ளதாகவும், அவர்களை மிரட்டி தமது தேவையான அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தொடர்ந்து பெற்று வந்துள்ளார்.

மட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அனுப்புவதாக கூறி மிரட்டலும் விடுத்துள்ளார்.

பிரபலமான திரைப்பட பாணியில் சில பெண்களுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளார் Roney Schelb.

கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள Roney Schelb-ன் குடியிருப்பில் இருந்து பாலியல் கருவிகள் உள்ளிட்ட பல ஆவணங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த திங்களன்று இவர் பயன்படுத்திய அலைபேசியை ஆய்வு செய்த பொலிசார், அதில் சுமார் 1,600 பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

Roney Schelb-ன் மிரட்டலுக்கு தப்பிய பெண் ஒருவரின் புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் ஒரு மாத காலம் விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்துள்ளனர்.

ஆனால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை Roney Schelb மறுத்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிக்னேஷ் சிவனை கோபமாக திட்டும் தனுஷ் ரசிகர்கள் !
Next articleதள்ளாத வயதிலும் ரொமான்ஸில் அசத்தும் காதல் ஜோடி! வைரல் வீடியோ !