பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.!

0
396
Sign Up to Earn Real Bitcoin

கர்நாடக மாநிலத்தில் இறந்துபோன தனது தாயின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு குட்டி குரங்கு வாரமல் இருந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மின்சாரம் தாக்கி தாய் குரங்கு இறந்துவிட்டதால், Lakshmeshwara கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மரப்பலகையில் டேபிள் செய்யப்பட்டு அதில் குரங்கின் உடலை வைத்து அதற்கு மாலைபோடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த குட்டிகுரங்கு தாயின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளது.

இதனைப்பார்த்து அங்கிருந்தவர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர். மேலும் தனது தாயின் உடலை அங்கிருந்து எடுத்து செல்வதற்கு குட்டி குரங்கு அனுமதிக்கவில்லை.

அதன்பின்னர், குட்டிகுரங்கை தாயிடம் இருந்து எடுத்துவிட்டு தாய் குரங்கை அடக்கம் செய்துள்ளனர்.

பிரிவு என்பது ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: