பாத எரிச்சலையும் குதி வலியையும் போக்கும் பலாகுடூச்யாதி தைலம் தயாரிப்பது எப்படி!

0
1074

பாத எரிச்சலையும் குதி வலியையும் போக்கும் பலாகுடூச்யாதி தைலம் தயாரிப்பது எப்படி!

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. சித்தாமுட்டிவேர் – பலாமூல 300 கிராம்
2. சீந்தில்கொடி – குடூசி 300 “
3. தேவதாரு – தேவதாரு 300 “
4. தண்ணீர் – ஜல 14.400 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 3.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி நல்லெண்ணெய் (திலதைல) 900 கிராம் சேர்த்து அதில்

1. ஜடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ 18.750 கிராம்
2. கோஷ்டம் – கோஷ்ட 18.750 “
3. சந்தனம் – சந்தன 18.750 “
4. குந்துருஷ்கம் – குந்துருஷ்க 18.750 “
5. கிரந்திதகரம் – தகர 18.750 “
6. அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா 18.750 “
7. ஸரளதேவதாரு – ஸரள 18.750 “
8. சித்தரத்தை – ராஸ்னா 18.750 “

இவைகளை அரைத்துக் கல்கமாகக் சேர்த்துக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு: சம்பிரதாயத்தில் கஷாய சாமான்கள் மொத்தம் 800 கிராம், எண்ணெய் 800 கிராம், கல்க சாமான்கள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துத் தயாரிக்கப்படுகிறது. மேலும் வெட்டிவேர் (உசீர), அதிமதுரம் (யஷ்டீ), கோரைக்கிழங்கு (முஸ்தா) ஆகியன வகைக்கு 12.500 கிராம் வீதம் சேர்க்கப்படுகின்றன.

பயன்படுத்தும் முறை:

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். தொடர்ந்து தலைக்கும் தடவி வரலாம்.

தீரும் நோய்கள்:

எரிச்சல் (தாஹ), வலி (அங்கமர்த), வீக்கம் இவைகளுடன் கூடிய வாத நோய்கள் குறிப்பாக வாதரக்த எனப்படும் குதிகால்வாதம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை!

வாத பித்த நோய்களில் -இந்த தைலம் நல்ல பலன் தரும்
மதுயஷ்டி தைலம் போன்ற தைலங்களை போல -பாத எரிச்சல் -சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலையும் முழுமையாக கட்டுபடுத்தும்.

தைல தாரை போன்று இந்த தைலத்தை ஒரு கிளாசில் சூடாக்கி எடுத்து கொண்டு பொறுமையாக குதி வலி உள்ள இடத்தில் ஊற்றிகொண்டிருக்கும் சிகிச்சை (கீழே ஒரு தட்டை வைத்து கொள்வது நல்லது )-எப்படிப்பட்ட குதி வலியையும் குறைக்கும் ..குறைந்த பட்சம் பதினைந்து நாட்களுக்கு காலை மாலை பதினைந்து நிமிடங்கள் -இந்த தைலம் உடன் முறிவெண்ணை கலந்து செய்தால் நல்ல பலன் தரும் .

உப்பு குற்றி என்னும் இந்த இடத்தில் ஏற்படும் வலிகளுக்கு அந்த இடத்தில் ஊசி போட்டாலும் (ஸ்டீராய்ட் ஊசி ) கேட்காத வலி -மேலே சொன்ன சிகிச்சையில் நிரந்தரமாக கேட்கும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: