அழகையும் கெடுத்து வலியையும் கொடுக்கும் பாத வெடிப்புக்கு நாட்டு வைத்தியம்!

0
3990

குதிகால் வெடிப்பு என்பது உங்களது பாதங்களின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, மிக அதிக வலியையும் கொடுக்கும். அதிக நேரம் தண்ணீரிலேயே இருப்பது, உப்பு தண்ணீர் அதிகமாக கால்களில்படுவது போன்றவற்றால் வெடிப்புகள் ஏற்படும். இது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். பலர் தங்களது பாதங்களில் உள்ள இந்த வெடிப்புகளை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள். இந்த வெடிப்புகளை அப்படியே விட்டுவிட கூடாது. இதனை எளிதில் போக்க சில குறிப்புகளை இந்த பகுதியில் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை கொண்டு பாதங்களை நன்றாக 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு பின்னர், பாதங்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல மாற்றத்தை விரைவில் உணர முடியும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அது உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மருதாணி இலைகள்

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

உப்பு, எலுமிச்சை

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் இருக்கும் செல்கள் போய்விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

வேப்பிலை, மஞ்சள்

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைத்து, இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

விளக்கெண்ணை

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

தேங்காய் எண்ணெய்

இரவு தூங்கும் முன்னர், கால்களை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். இதற்கு பின்னர், பாதங்களை உலர்த்திவிட்டு தேங்காய் எண்ணெய்யை பாதங்களுக்கு தடவ வேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: